Songtexte.com Drucklogo

Ennavale Adi Ennavale Songtext
von Unnikrishnan

Ennavale Adi Ennavale Songtext

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னை கண்டதும் கண்டு கொண்டான்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றான்

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷம்டி
கண்களெல்லாம் எனை பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தொஙருதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி


என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணாடிப்பெண்

கோபுரமே உன்னை சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பான்
வெண்ணிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பான்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பான்
என் காதலின் தேவையை காட்டுக்குள் ஒத்திவைப்பன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புது கவிதைகள் என்றுரைப்பான்

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னை கண்டதும் கண்டு கொண்டான்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றான்

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Unnikrishnan

Fans

»Ennavale Adi Ennavale« gefällt bisher niemandem.