Songtexte.com Drucklogo

Ragasiya Kanavugal Songtext
von Hariharan & Madhushree

Ragasiya Kanavugal Songtext

ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்

முதல் பிழை போல் மனதினிலே
விழுந்தது உன துருவம்
உதடுகளால் உனை படிப்பேன்
இருந்திடு அரை நிமிடம்
தொலைவதுபோல் தொலைவதுதான்
உலகில் உலகில் புனிதம்

இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே


மறுபடி ஒருமுறை பிறந்தேனே
விரல் தொட புருவமும் சிவந்தேனே
ஓ இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ

சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல எனை சூழ
நரம்புகளோடு குறும்புகளாடும் எழுதிய கணக்கு
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு
ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்

உயிரணு முழுவதும் உனை பேச
உனை பேச
இமை தொடும் நினைவுகள் அனல் வீச
அனல் வீச
ஓ நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ

எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ படர்வாய்
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்
ஹா தவறுகளாளேயே தொடுகிற நீயும் அழகிய மிருகம்


ரகசிய கனவுகள் ஜல் ஜல்
உன் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில ஜில் ஜில்
என் இருதயம் நழுவுதே செல் செல்

குயிலிணமே குயிலிணமே
எனக்கொரு சிறகு கொடு
முகிலிணமே முகிலிணமே
முகவரி எழுதிக் கொடு
அவனிடமே அவனிடமே
எனது கனவை அனுப்பு

இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
„Grenade“ ist von welchem Künstler?

Fans

»Ragasiya Kanavugal« gefällt bisher niemandem.