Songtexte.com Drucklogo

Nandri Solla Unakku Songtext
von Unnikrishnan & K. S. Chithra

Nandri Solla Unakku Songtext

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்

செவ்விளனி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்


கள்ளிருக்கும் தாமரைய
கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிர்தான்

இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்

உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேறு வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குற?

வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே?


என்னுடைய நாயகனே
ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு
அந்த வானம் எல்லையே

எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென
ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே
மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குற?

நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
திருக்கோவில் வீடுயென்று
விளக்கேற்ற நீயும் வந்த
நேரில் வந்த ஆண்டவனே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Nandri Solla Unakku« gefällt bisher niemandem.