Songtexte.com Drucklogo

Kuthikkira Kuthikkira Songtext
von Ilaiyaraaja

Kuthikkira Kuthikkira Songtext

குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி
என் மனசை காட்டுது
அது துடிக்கிது துடிக்கது வயசுப்படி
என் உசிர மீட்டுது

பால் போலே பனிப் போலே நிறம் தானே-ஏ-எ-ஏ
தேர் போல அசைஞ்சாடும் நடை தானே-ஏ-ஏ
அட நெலத்தில நடக்குது நெலவுக்குட்டி
இது நெசந்தானே
எசை எடுக்குது படிக்குது தவுலுத்தட்டி
புது சுகந்தானே

குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி
என் மனசை காட்டுது
அது துடிக்கிது துடிக்கிது வயசுப்படி
என் உசிர மீட்டுது
ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே

ரொட்டி வைக்கட்டா ஜோடி கட்டிவைக்கட்டா
புள்ளை குட்டி ஒண்ணு பெத்துப்போட்டா பாத்துக் கொள்ளட்டா
பொத்தி வைக்கட்டா நெத்திப் பொட்டு வைக்கட்டா
எட்டுப் பட்டியையும் ஏங்க வைக்கட்டா ஹைய்


பதறாம நடைபோடு உலகம் நமதாச்சு
கடிவாளம் கிடையாது துணிவே துணையாச்சு
உன்னை பாத்து என்னை பாத்து தெருவே சிரிக்காய்ங்க
நடை பாத்து எடை போட்டு தனியா ரசிப்பாய்ங்க

சட்டியில் சட்டியில் பழஞ்சோறு
தொட்டுக்க தொட்டுக்க கருவாடு
தந்தது தந்தது அட யாரு
தங்கமே தங்கமே விளையாடு
அப்புக்குட்டி அப்பன் கட்டும் றெக்க கட்டேன்
எட்டுத்திக்கும் கட்டவித்து திரியலாமுடா

குதிக்கிற ஹான் குதிக்கிற
குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி
என் மனசை காட்டுது
அது துடிக்கிது துடிக்கிது வயசுப்படி
என் உசிர மீட்டுது


அடியாத்தி அடியாத்தி பசியே மறந்தாச்சு
ராசாத்தி ராசாத்தி கனவே நெனைப்பாச்சு
மனசாட்சி உனதாச்சு எல்லாம் புதுசாச்சு
பெருமூச்சு அனலாச்சு இரவோ பழுதாச்சு
உள்ளுக்க உள்ளுக்க சிறுவாணி
வெளிய வெளிய மகராணி
விண்ணுக்கும் விண்ணுக்கும் அவ ராணி
என்னைக்கும் எனக்கு என் ராணி
பட்டு வேட்டி கட்டி மஞ்சத் தாலி கட்டி
இச்சு வெச்சி இச்சு வெச்சி
அச்சசச்சச்சோ

குதிக்கிற ஹ குதிக்கிற
குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி
என் மனசை காட்டுதே
அட ஜொலிக்குது ஜொலிக்குது வைரக்கட்டி
என் மனசு ஏங்குதே

மொகம் பாத்து தடுமாறி போனேனே
அ-க்கேன்-கேன்-அ-க்கேன்-கேன்-என்றாளே
அட நெலத்துல நடக்குது நெலவுக்குட்டி
அது நெசந்தானே
எசை எடுக்குது படிக்குது தவுலுத்தட்டி
புது சொகந்தானே

குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி
என் மனசை காட்டுது
அட சொலிக்குது சொலிக்குது வைரக்கட்டி
என் மனசு மனசு மனசு மனசு மனசு ஏங்குது

இல்லல்லல்லல்லல்லே
என் மனசு ஏங்கலை ஹைய்
ஆனா பய உசிரு ஏங்குதில்லை

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Kuthikkira Kuthikkira« gefällt bisher niemandem.