Songtexte.com Drucklogo

Usure Songtext
von Siddhu Kumar

Usure Songtext

உசுரே, விட்டுபோயிட்ட
மனச வெட்டி வீசிட்ட
உசுரே, விட்டுபோயிட்ட, ஓ
மனச வெட்டி வீசிட்ட

நீ தந்த காயமும், நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே, ஓ
நான் தந்த பாசமும், நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா?

உசுரே, விட்டுபோயிட்ட
மனச வெட்டி வீசிட்ட

யாரோடும் பேசாம ஒரு தீவப் போல நாளெல்லாம் வாழ்ந்தேனே
வேரோடு சேராத ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே, ஓ


அடி தன்னோட இறகெல்லாம் கண்முன்னே விழுந்தாலும்
பறவைகள் தேடாதே
அடி ஆனாலும் இறகுக்கு பறவையின் ஞாபகம்
எப்போதும் போகாதே

(ஏனோ) வலிகளும் மறையல, (ஏனோ) அழுதிட தோணல
(நானோ) செதறிய கண்ணாடி
(போ-போ) தனி மரம் நானடி, (போ-போ) எனக்கினி யாரடி
(போ-போ) எவளும் வேணான்டி

உசுரே, விட்டுபோயிட்ட
மனச வெட்டி வீசிட்ட

நீ தந்த காயமும், நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே, ஓ
நான் தந்த பாசமும், நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா?

ஏ உசுரே, ஏ மனசே
ஓ, ஏ உசுரே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer ist auf der Suche nach seinem Vater?

Fans

»Usure« gefällt bisher niemandem.