Songtexte.com Drucklogo

Yaarumillaa Songtext
von Sid Sriram

Yaarumillaa Songtext

யாருமில்லா வாழ்க்கையில்
நீ இருக்க ஏங்கினேன்
காலம்வரை காதலாய்
உன் மடியில் தூங்கினேன்

நீ பிரிந்து போகிறாய் என் உயிரில் உடைகிறேன்
எஞ்சி விட்ட தூசிலே நான் என்னை கோர்க்கிறேன்

அவள் பார்வைகள் சுமக்காமலே அந்த நாளையும் வருதே
நொடி நேரத்தில் உயர்வானது அந்த சாவெனும் வரமே
நீ தொலைத்த ஆழத்தில் நான் ஒழிகிறேன்
அனாதை காட்டிலே நான் கரைகிறேன்


கண்ணீரை காப்பாற்றி
உனக்காக சேர்க்கிறேன், தடாகமே

தாகம் இல்லாத மீனும் தண்ணீரில்
வாழும் நியாத்தை ஏற்கிறேன்
யாரும் செல்லாத தீவின் மையத்தில்
புள்ளிப் பூவாக போகிறேன்

ஈசல் இறக்கைமேல் தீயின் பாதங்கள்
பாரம் எப்படி தாங்குவேன்?
நீயே இல்லாத கீறல் கொள்ளாத
நெஞ்சை எங்கே நான் வாங்குவேன்?

கண்ணீரை காப்பாற்றி
உனக்காக சேர்க்கிறேன் தடாகமே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Sid Sriram

Fans

»Yaarumillaa« gefällt bisher niemandem.