Songtexte.com Drucklogo

En Iniya Thanimaye Songtext
von Sid Sriram

En Iniya Thanimaye Songtext

என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே

புதிதான அதிகாலையோ, புகை சூடும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு
மழை வீழும் இளமாலையோ இசையில்லா இடைவேளையோ
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு

உன்னோடு மட்டும்தான் என் நேரம் எனது
உன்னோடு மட்டும்தான் மெய் பேசும் மனது
மனிதரின் மொழி கேட்டு-கேட்டு இதயம் பழுதாய்
உனதமைதியில்தானே ஆனேன் முழுமுழுதாய்

என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே


அலை மோதும் கரைமீதிலோ, மணல் பாதம் சுடும்போதிலோ
உன்னோடு நான் நடந்தால் மண்ணே பூச்சிறகு
கரைகின்ற அடி வானமோ, குறையாத பெருந்தூரமோ
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு

என் தாயின் கருவில் என்னோடு பிறந்தாய்
என் வாழ்வின் முடிவில் என்னோடு இருப்பாய்
உறவுகள் வந்து சேரும் நீங்கும் நீதான் நிலையாய்
அதற்க்குனக்கொரு நன்றி சொன்னேன் முதல்முறையாய்

என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே

இதுவரை கற்கா கலைகளெல்லாம் உன்னுடன் கற்கும் வேளையிலே
என் உயிர் தோழி நீயென்பேன்-நீயென்பேன்
இதுவரை காணா காட்சிகளை உன்னுடன் காணும் வேளையிலே
எந்தன் காதல் நீயென்பேன்-நீயென்பேன்

ஒரு சிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க
சிறு ஊடல்கொண்டு நீங்கி போகின்றாய்
கவலைகள் என்னை வருத்த உன்னிடம் என்னை துரத்த
உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய்

எனை துயிலென அணைத்திடு தனிமையே
என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே
கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே, தனிமையே


என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே

என் இனிய தனிமையே, ஓ
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Sid Sriram

Fans

»En Iniya Thanimaye« gefällt bisher niemandem.