Songtexte.com Drucklogo

Raasathi Songtext
von Shahul Hameed

Raasathi Songtext

ராசாத்தி என் உசுரு என்னுதில்ல
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
நீபோனா என் உசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ராசாத்தி என் உசுரு என்னுதில்ல

கார வீட்டுத் திண்ணையில
கறிக்கு மஞ்சள் அறைக்கையில
மஞ்சள அறைக்கும் முன்ன மனச அரச்சவளே

கரிசக் காட்டு ஓடையில கண்டாங்கி தொவைக்கயில
துணிய நனைய விட்டு மனச புழிஞ்சவளே

களத்து மேட்டுல இழுத்து முடிஞ்சி கிட்டு
போனவ போனவதான் புத்திகெட்டு போனவதான்

கல்யாணச் சேலையில கண்ணீராத் தொடச்சிகிட்டுப்
போனவ போனவதான் பொஞ்சாதியா போனவதான்

நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப் பூச்சூடி அழுதபடி போறவளே


கடலக் காட்டுக்குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
கடலக் காட்டுக்குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல

ராசாத்தி என் உசுரு என்னுதில்ல
பூச்சூடி வாக்கப்பட்டு போறபுள்ள
நீபோனா என் உசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ராசாத்தி என் உசுரு என்னுதில்ல

தொட்டு பொட்டு வெச்ச
சுட்டு வெரல் காயலையே
மறிக் கொழுந்து வெச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே

மருதையில வாங்கித் தந்த வளவி ஒடையலையே
மல்லு வேட்டி மத்தியில மஞ்சக்கர மாறலையே

அந்தக் கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும்
பார்ப்பதெப்போ
பார்ப்பது பாற்பதெப்போ பௌர்ணமியும் வாரதெப்போ

அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கேட்பது கேட்பதெப்போ கீரைத்தண்டு பூப்பதெப்போ

கருவேலங் காட்டுக்குள்ள கரிச்சான் குருவி ஒண்னு
சுதி மாறிக் கத்துதம்மா தொணையத் தான் காணோமின்னு


கடலக் காட்டுக்குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
கடலக் காட்டுக்குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல

ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச்சூடி வாக்கப் பட்டு போறபுள்ள
நீபோனா என் உசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச்சூடி வாக்கப் பட்டு போறபுள்ள

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Raasathi« gefällt bisher niemandem.