Songtexte.com Drucklogo

Adi Aadu Songtext
von Malaysia Vasudevan

Adi Aadu Songtext

லல லால லாலலலா
லல லால லாலலலா
லாலா லல லாலா லாலா லலலா
லாலா லல லாலா லாலா லலலா

அடி ஆடு பூங்கொடியே
விளையாடு பூங்கொடியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
லல லால லாலலலா
லல லால லாலலலா

மழலை மணிகள் கலைக்கோவில் சிற்பங்கள்
மழலை மணிகள் கலைக்கோவில் சிற்பங்கள்
மனதில் இசைக்கும் பொன்வண்டுகள்

இவை தேவ தத்துவங்கள்
என் ஆசை சித்திரங்கள்
என் வாழ்க்கையே இந்த பூக்களை தினம்
காக்கும் சேவை ஒன்றுதான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
லல லால லாலலலா லல லால லாலலலா


அமுதம் பொழியும் கார்கால மேகங்கள்
அமுதம் பொழியும் கார்கால மேகங்கள்
அணைத்தால் உலகே மறக்கின்றதே

நான் பெண்ணை கண்டவனா
ஒரு பிள்ளை பெற்றவனா
என் வாழ்க்கையே இந்த பூக்களை தினம்
காக்கும் சேவை ஒன்றுதான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
லல லால லாலலலா லல லால லாலலலா

கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்
கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்
களங்கம் அறியா கடல் சங்குகள்

இவை பார்க்கும் பார்வையிலே
பல பாவம் தீர்ந்துவிடும்
என் வாழ்க்கையே இந்த பூக்களை தினம்
காக்கும் சேவை ஒன்றுதான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
லாலா லல லாலா லாலா லலலா

அடி ஆடு பூங்கொடியே
விளையாடு பூங்கொடியே
லாலா லல லாலா லாலா லலலா
லாலா லல லாலா லாலா லலலா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Malaysia Vasudevan

Fans

»Adi Aadu« gefällt bisher niemandem.