Songtexte.com Drucklogo

Idhu Porkalama Songtext
von Harish Raghavendra

Idhu Porkalama Songtext

இது போர்களமா
இல்லை தீ குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே

இது போர்களமா
இல்லை தீ குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே
ஓஓ ஓஓ ஓஓ

தீயின் மனமும்
நீரின் குணமும் தெளித்து செய்தவள் நீ நீயா
தெரிந்த பக்கம் தேவதையாக
தெரியா பக்கம் பேய் பேயா

நேரம் தின்றாய் நினைவை தின்றாய்
என்னை தின்றாய் பிழை இல்லயா
வேலை வெட்டி இல்லா பெண்ணே
வீட்டில் உனக்கு உணவில்லையா

இரு விழி உரசிட ரகசியம் பேசிட
இடி மழை மின்னல் ஆரம்பம்
பாதம் கேசம்
நாபிக்கமலம் பற்றி கொண்டதும் பேரின்பம்


தகதகவென எரிவது தீயா
சுடசுட வென தொடுவது நீயா
தொடு தொடு வென சொல்லுகின்றாயா
கொடு கொடு வென கொள்ளுகின்றாயா

நண்பர் கூட்டம் எதிரே வந்தால்
தனியாய் விலகி நடக்கின்றேன்
நாளை உன்னை காண்பேன் என்றே
நீண்ட இரவை பொறுக்கின்றேன்

இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட
இன்னும் என்ன செய்வாயோ
செப்படி வித்தை செய்யும் பெண்ணே
சீக்கிரம் என்னை கொள்வாயோ

எந்த கயிறு உந்தன் நினைவை
இறுக்கி பிடித்து கட்டுமடி
என்னை எரித்தால் எலும்பு கூடும்
உன் பேர் சொல்லி அடங்குமடி

பட பட வென படர்வதும் நீயா
விடு விடு வென உதிர்வதும் நீயா
தட தட வென அதிர வைப்பாயா
தனிமையிலே சிதற வைப்பாயா

இது போர்களமா
இல்லை தீ குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Harish Raghavendra

Fans

»Idhu Porkalama« gefällt bisher niemandem.