Songtexte.com Drucklogo

Kaadhal Rojave Songtext
von S. P. Balasubrahmanyam & Sujatha

Kaadhal Rojave Songtext

ஆண்: காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே, எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆண்: கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (இசை)

பெண்குழு: ல.ல ல... லலலா... ல.ல ல... லலலா.
ல.ல ல... லலலா.லல லல லல லலலா...

ஆண்: தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்


ஆண்: வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

ஆண்: காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

பெண்குழு: ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண்: வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ

ஆண்: பாவையில்லை பாவை, தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

ஆண்: காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

Songtext kommentieren

Schreibe den ersten Kommentar!

Übersetzung

Beliebte Songtexte
von S. P. Balasubrahmanyam & Sujatha

Quiz
Welcher Song kommt von Passenger?

Fan Werden

Fan von »Kaadhal Rojave« werden:
Dieser Song hat noch keine Fans.
Diese Website verwendet eigene Cookies und Cookies von Dritten um die Nutzung unseres Angebotes zu analysieren, dein Surferlebnis zu personalisieren und dir interessante Informationen zu präsentieren (Erstellung von Nutzungsprofilen). Wenn du deinen Besuch fortsetzt, stimmst du der Verwendung solcher Cookies zu. Bitte besuche unsere Cookie Bestimmungen um mehr zu erfahren, auch dazu, wie du Cookies deaktivieren und der Bildung von Nutzungsprofilen widersprechen kannst.
OK